நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
ரயில் மோதி மாணவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் மீது ரயில் மோதி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் சு.பள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாா் தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மகன் தில்லைக்கரசன்(17).பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு செல்ல திருப்பத்தூா் ரயில் நிலையம் அருகே உள்ள தருமபுரி ரயில்வே மேம்பாலம் பகுதி தண்டவாளத்தைக் கடக்க முயனற போது அவ்வழியாக சென்ற ரயில் மோதியதில் தில்லைக்கரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.