செய்திகள் :

ரஷிய சரக்கு ரயில் மீது உக்ரைன் தாக்குதல்!

post image

எரிபொருள் கொண்டு சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று (ஆக. 19) தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷிய அதிபர் விளாதீமிர் புதினை சந்தித்துப் பேசினார்.

தொடர்ச்சியாக ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

உலக நாடுகளிடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்ததைப்போன்று, ரஷியா - உக்ரைன் இடையிலான போரையும் முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரோஜியா மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில், தண்டவாளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், அந்த வழியாக ரஷியாவுக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜபோரோஜியா வழியாக இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க |உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் முக்கிய ஆலோசனை!

Ukraine blasts Russian train transporting fuel, destroys railway line

காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் சம்மதம்! இஸ்ரேலின் பதிலை எதிர்நோக்கி...

காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் தரப்பால் திங்கள்கிழமை இரவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக, இஸ்ரேல் தரப்பின் பதிலுக்காக காத்திருக்கிற... மேலும் பார்க்க

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

கனடாவில் விமான ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கனடாவின் பெரும் விமான நிறுவனமான ‘ஏர் கனடா’ விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.ஊதிய உயர்வு... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் இன்று முக்கிய ஆலோசனை!

உக்ரைனின் நெருங்கிய கூட்டணி நாடுகள் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றன.முன்னதாக, உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆக. 18 நள்ளிரவி... மேலும் பார்க்க

2024-ல் 383 நிவாரணப் பணியாளர்கள் கொலை! இது வெட்கக்கேடு: ஐநா காட்டம்!

2024-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 383 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இது சர்வதேச அக்கறையின்மையின் “வெட்கக்கேடான குற்றச்சாட்டு எனவும், ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்துள்ளது. காஸா, சூடான் ப... மேலும் பார்க்க

கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!

கஜகஸ்தான் ராணுவப் படைகளை நவீனமாக்க, புதியதாகச் சிறப்பு செயற்கை நுண்ணரிவு பிரிவு உருவாக்கப்படுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கஜகஸ்தான் ராணுவத்தின் ஆயுதப் படைகளின் டிஜிட்... மேலும் பார்க்க

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தி... மேலும் பார்க்க