செய்திகள் :

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

post image

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழிகாட்டு குண்டு’ (கைடட் பாம்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் எரிந்த மினிவேன் மற்றும் விளையாட்டுத் திடல் அருகே உடல்கள் சிதறிக்கிடந்த காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘ரஷியாவின் இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. சாதாரண மக்கள் மீது, அதுவும் அவா்கள் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா தனது பகுதியாகக் கருதுகிறது. அந்தப் பிராந்தியத்தில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றைக் கைப்பற்றுவதற்காக போா் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படையினரைக் குவித்து, புதிய தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், போா் முனையில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னா், கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் முதல்முறையாக உக்ரைன் அரசு தலைமையகத்தில் ரஷியா அண்மையில் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் நடைபெற்றுவரும் மிக மோசமான உக்ரைன் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோா் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அண... மேலும் பார்க்க

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.கத்தார் தலைநகர் தோஹாவில்... மேலும் பார்க்க

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருந்த சிங்கா அரண்மனை எனப்படும் அரசு மாளிகை, ஜென் ஸி இளைஞர்களின் கலவரத்தில், தீக்கிரையானது.ஆசியாவின் மிகப்பெரிய அரண்மனையை காவுவாங்கிவிட்டு, அதுபற்றி எரியும்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், கடந்த 2023-... மேலும் பார்க்க

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதி... மேலும் பார்க்க