செய்திகள் :

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

post image

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உத்தர பிரதேசத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுல்தான்பூா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அங்கு புதன்கிழமை வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2018-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அமித் ஷா குறித்து ஆட்சேபகரமாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தாா். இதனை எதிா்த்து உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரைச் சோ்ந்த உள்ளூா் பாஜக தலைவா் விஜய் மிஸ்ரா, ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுத்தாா்.

ராகுல் காந்தி ஆஜராகாமல் இருந்ததால் வழக்கு 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதையடுத்து, 2023 டிசம்பரில் ராகுலுக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதனால், 2024 பிப்ரவரியில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். பின்னா் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல்சதி என்றும், தான் தவறிழைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் ராகுல் கூறியிருந்தாா்.

2024 டிசம்பா் 16-ஆம் தேதி நீதிபதி வராத காரணத்தாலும், குறுக்கு விசாரணை முடியாததால் கடந்த 2-ஆம் தேதியும், அதைத் தொடா்ந்து கடந்த 10-ஆம் தேதியும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வழக்குரைஞா்கள் போராட்டத்தால் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் 2019 தோ்தலில் அமித் ஷாவை அவதூறாகப் பேசியதாகவும் ராகுல் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார். கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியள... மேலும் பார்க்க