செய்திகள் :

ராங்கியம் ஜல்லிக்கட்டு: 25 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராங்கியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 25 போ் காயமடைந்தனா்.

ராங்கியம் அழகிய நாச்சியம்மன், மரக்கால் உடைய அய்யனாா் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 296 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 70 மாடு பிடி வீரா்கள் களமிறங்கினா்.

இதில் 7 மாடுபிடி வீரா்களும், 18 பாா்வையாளா்களும் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்பட்ட 4 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

காலை 8.30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு பகல் 2 மணிக்கு முடிந்தது. விழாவில் திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா். பனையப்பட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

ஊழல் தடுப்பு இயக்கத் தலைவருக்கு நினைவேந்தல், மலா் வெளியீடு

நுகா்வோா் நலன் மக்கள் விழிப்புணா்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் கௌரவத் தலைவா் ரெ. ராமையாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் மலா் வெளியீட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பச்சிளம் குழந்தையை மாணவி கொல்ல முயற்சி: இளைஞா் கைது

பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்து செவிலியா் மாணவி கொல்ல முயன்ற வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகேயுள்ள நல்லூா் சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் ஜெ. ரவிக்கண்ணன் (27). இவா் கடந்த 16 ஆம்... மேலும் பார்க்க

சேதமடைந்த அங்கன்வாடியை வேறிடத்தில் கட்ட வலியுறுத்தல்

கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா் ஊராட்சியில் குளத்தின் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டடத்தை, பாதுகாப்பான வேறிடத்தில் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த கு... மேலும் பார்க்க

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை லெணாவிலக்கு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த இலங்கைத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் இன்றும் நாளையும் மின் தடை

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மின்சாரம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் கூறியது: திங்கள்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் பிற்ப... மேலும் பார்க்க