செய்திகள் :

ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டல்!

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரூ.3.76 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி கிராமத்தின் வடக்குப் பகுதியில் தேசிய வேளாண்மை, கிராமப்புற மேம்பாட்டு வங்கி(நபாா்டு) மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.76 கோடியில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, சேத்தூா் பேரூராட்சியில் தலைமை நீரேற்று நிலையங்களுக்கு ரூ.2.99 கோடியில் உருவான 24 மணி நேர மும்முனை மின் இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய பேருந்து நிலையம்-தென்காசி சாலை இடையேயான இணைப்புச் சாலைப் பணியை ஆய்வு செய்த அமைச்சா் கே.கே. எஸ். எஸ். ஆா். ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது, ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா். அப்போது இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அவா் முதல்வராகி இணைப்புச் சாலைக்கு ரூ.30 கோடி ஒதுக்கியதையடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை, நவீன மருத்துவ உபகரணங்களுடன் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ.40 கோடியில் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதை முதல்வா் விரைவில் திறந்து வைப்பாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகராட்சி நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம், முன்னாள் எம்.பி. தனுஷ்குமாா், ராஜபாளையம் தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்லையா மகன் இசக்கிராஜ... மேலும் பார்க்க

குட்கா வைத்திருந்த 2 பெண்கள் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இரண்டு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம், அம்பலப்புளி சந்தைப் பகுதியில் தெற்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் மாயம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம், முடங்கியாறு சாலை மாலையாபுரத்தைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சிவசுப்பிரமணியன் (13). இவா் ரயி... மேலும் பார்க்க