ராஜஸ்தான் சுமாரான பேட்டிங்: கேகேஆர் வெற்றிபெற 152 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேகேஆர் அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல்-இன் 6ஆவது போட்டியில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதுகிறது. இதில் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் எடுத்தார்.
ஜெய்ஸ்வால் 29, சஞ்சு சாம்சன் 25 ரன்கள் எடுத்தார்கள். 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
கடைசியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.
கேகேஆர் அணியில் வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, ஹர்சித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
ஸ்பென்சார் ஜான்சன் 1 விக்கெட் எடுத்து 42 ரன்களை கொடுத்திருந்தார்.