செய்திகள் :

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

post image

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவித்தார். மேலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், பதவியை ராஜிநாமா செய்வதாக, ராஜிநாமாவுக்கான உரிய விளக்கத்துடன் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தன்னுடைய ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை அவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்திருப்பது விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இன்று (அதாவது நேற்று - ஜூலை 21) மாலை 5 மணி வரை பல எம்பிக்களுடன் நானும் அவருடன் இருந்தேன். இரவு 7.30 மணிக்கு அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

ஜகதீப் தன்கர் அவருடைய உடல்நலத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், திடீரென ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இருப்பினும், இது யூகங்களுக்கான நேரம் அல்ல.

தன்கர் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமமாக நடத்தினார். நாளை மதியம் 1 மணியளவில் வணிக ஆலோசனைக் குழு கூட்டத்துக்கும் திட்டமிட்டிருந்தார். நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் நாளை(அதாவது இன்று - ஜூலை 22) வெளியிடவிருந்தார்.

அவர் நலமுடன் இருக்க வாழ்த்துகிறோம். மேலும், அவர் தன்னுடைய ராஜிநாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதமரும் தன்கரிடம் கூறி முடிவை மாற்றுவார் என நம்புகிறோம். நாடு விரும்புவதும் அதுதான்” எனப் பதிவிட்டுள்ளார்.

Congress has appealed to Vice President Dhankhar to reconsider his resignation decision.

இதையும் படிக்க :பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரையில் விபத்து: பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள அமர்நாத் புனித தலத்துக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற ஒரு பேருந்து இன்று(ஜூலை 22) பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து பக்தர்கள் காயமடைந்தனர். அதனைத்தொடர்... மேலும் பார்க்க