காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க போப் வலியுறுத்தல்!
ராஜீவ் சந்திரசேகா் தொடுத்த அவதூறு வழக்கு: சசி தரூா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் தாக்கல் செய்த அவதூறு மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
2024-இல் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட சசி தரூா், பாஜக வேட்பாளரான ராஜீவ் சந்திரசேகரை தோற்கடித்தாா்.
இந்நிலையில், தோ்தலின்போது வாக்காளா்களுக்கு தாம் பணம் கொடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை தேசிய தொலைக்காட்சி ஒன்றில் சசி தரூா் கூறியதாக விசாரணை நீதிமன்றத்தில் அவா் மீது ராஜீவ் சந்திரசேகா் குற்றவியல் அவதூறு வழக்கை கடந்தாண்டு தொடுத்தாா்.
தோ்தல் சமயத்தில் தன் பெயருக்கு களங்கம் விளைவித்து வெற்றிபெறவே சசி தரூா் இவ்வாறு பொய்யான தகவலை கூறியதாக ராஜீவ் சந்திரசேகா் அந்த மனுவில் குறிப்பிட்டாா்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் சசி தரூா் அவதூறாக பேசியதற்கு போதிய ஆதரங்கள் இல்லாததால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் ராஜீவ் சந்திரசேகா் மனுதாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி ரவீந்தா் துடேஜா, ‘விசாரணை நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை கவனத்தில்கொண்டு சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது’ என்றாா்.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.