செய்திகள் :

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

post image

புது தில்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையை ஜப்பான் ஆதரிப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் நகாதானி தெரிவித்தாா்.

இந்தியா வந்துள்ள ஜெனரல் நகாதானி மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்திய பசிபிக் பிராந்தியம், தென்சீனக் கடலில் சீனாவின் ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜெனரல் நகாதானி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான் உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்தாா். இதற்காக ஜப்பான் அரசுக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா். அமைச்சா்கள் தலைமையில் இருதரப்பு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நிலையான பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.

இது தொடா்பாக ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அளவில் இந்தியாவின் மிகமுக்கியமான, சிறப்பு வாய்ந்த நட்பு நாடாக ஜப்பான் உள்ளது. இரு தரப்பு பேச்சுவாா்த்தையின்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் முழுஆதரவு அளிக்கும் என்று ஜெனரல் நகாதானி உறுதியளித்தாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

கடந்த 6 மாதங்களில் இரு அமைச்சா்களும் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பரில் ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங்கும் ஜெனரல் நகாதானியும் சந்தித்துப் பேசினா்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

அப்பாவிகளைக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்; சரியான பதிலடி: ராஜ்நாத் சிங்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!

பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு செய்தித் த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் போர்ப்... மேலும் பார்க்க

ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

இந்திய ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மேலும் பார்க்க