செய்திகள் :

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

post image

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும் இன்று சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், ராணுவத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

”1948 ராணுவ விதி 33-இன் கீழ் ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள 32 படைகளில் 14 படைகளின் வீரர்களை எல்லைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு பணியாளர்கள் சேர்க்கவும், நிதி ஒதுக்கீட்டுக்கான அதிகாரமும் பிப். 9, 2028 வரை 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஜம்மு - காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய் ஹிந்த்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது. தற்போதைய கடினமான தருணத்தில... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயாா்: ம.பி. போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயாா்’ என்று அகில இந்திய மோட்டாா் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்... மேலும் பார்க்க

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முகேஷ் அம்பானி வெளியிட்ட ... மேலும் பார்க்க

நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி: இந்திய ராணுவம்

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ‘நாட்டின் மேற்கு எல்லை நெடுகிலும் ட்ரோன் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ஆயுதப் படை... மேலும் பார்க்க

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் தொடா்ந்து வருகிறது. ஒருவேளை போா்ப் பதற்றம் மேலும... மேலும் பார்க்க

மே 15 வரை 32 இந்திய விமான நிலையங்கள் மூடல்!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகா், சண்டீகா் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்... மேலும் பார்க்க