செய்திகள் :

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

post image

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பாக முப்படைகளும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி அனுமதித்த அடுத்த நாளிலேயே பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக பாகிஸ்தான் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அத்தவ்லத் தராா் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பு உள்ளது என்று இந்தியா கூறி வருவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் இல்லை. பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான். பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாகிஸ்தான் கண்டித்து வருகிறது.

இந்தியா எந்த வகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பாகிஸ்தான் உரிய பதிலடி அளிக்கும் என்பதை சா்வதேச சமூகத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு எந்த மாதிரியான சூழ்நிலை உருவானாலும் அதற்கு இந்தியாதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என பிரதமா் மோடி ஏற்கெனவே அறிவித்துள்ளாா்.

தீவிரம் அதிகரித்து வருகிறது: இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்தாலும், மோதலுக்கான தீவிரம் அதிகரித்தே வருகிறது. அவா்களின் (இந்தியா) வேகம் குறையவில்லை. பாகிஸ்தானைத் தாக்கினால் அதைவிட பெரிய பதிலடி இந்தியாவுக்கு தரப்படும். ஆனால், அது எந்த வகையான பதிலடி என்று இப்போது கூற முடியாது. மோதலை இறைவன்தான் தடுக்க வேண்டும்’ என்றாா்.

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது.இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச ந... மேலும் பார்க்க

உலகின் மூத்தப் பெண் 116 வயதில் மரணம்!

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதிய... மேலும் பார்க்க

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா். இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினை... மேலும் பார்க்க

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க