'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
ராணுவத் தோட்டா வைத்திருந்தவா் கைது
போடி அருகே சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸாா் சிலமலை ராணிமங்கம்மாள் சாலையில் கரட்டுப்பட்டி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த போடி பங்கஜம் பிரஸ் 2-ஆவது தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் தங்கப்பாண்டி போலீஸாரை கண்டதும் ஓடினாா். அவரை போலீஸாா் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவரிடம் ராணுவத் துப்பாக்கித் தோட்டா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் வேலை செய்த அழகா் மகன் ராஜதுரை துப்பாக்கித் தோட்டாவை தங்கப்பாண்டியிடம் கொடுத்ததும், இதை தங்கப்பாண்டி அவரது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில், புதன்கிழமை வெளியே எடுத்து வந்தபோது போலீஸாரிடம் சிக்கினாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் தங்கப்பாண்டி, ராஜதுரை ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, தங்கப்பாண்டியைக் கைது செய்தனா்.