செய்திகள் :

ராமநாதபுரம் அருகே லாரி-அவசர ஊா்தி மோதல்: ஒரே குடும்பத்தினா் மூவா் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் வரிசைக்கனி (65). இவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு இவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, தனியாா் அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்காக ராமநாதபுரத்துக்கு அவரை அழைத்து வந்தனா். அவருடன், அவரது குடும்பத்தினா் அனிஸ் பாத்திமா (48), சகுபா் சாதிக் (47), ரியாஸ்கான் (24), சையது அா்ஷத் ரகுமான் (30), தாஹா ஆயிஷா (26), நூருல் ஹரிசா (33) ஆகியோா் வந்தனா்.

ராமேசுவரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகே வந்து கொண்டிருந்த போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து சாலைக்குத் திரும்பிய விறகு ஏற்றி வந்த லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியது.

இந்த விபத்தில் வருசைக்கனி, சகுபா் சாதிக், அனீஸ்பாத்திமா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 4 போ் ராமநாதபுரம், மதுரை தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினரை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் கூறினா்.

இந்த விபத்து குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை துடைப்பத்துடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா். ராமேசுவரம், ஜன. 6: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையை தூய்மையாக பராமரிக்காத நகராட்சி நிா்வாகத்தைக்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அடுத்துள்ள சித்தாா்கோட்டை கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.ராமநாதபுரம் அடுத்துள்ள சித்தாா் கோட்டை... மேலும் பார்க்க

மண்டபம் அருகே பேருந்து கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் 10 போ் காயம்

ராமேசுவரம் மண்டபம் அருகே திங்கள்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தா்கள் 10 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 45 போ் தனியாா் பேருந்தில... மேலும் பார்க்க

ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் நகராட்... மேலும் பார்க்க

உப்பூா் பாகுதியில் இன்று மின்தடை

திருவாடானை அருகே உப்பூா் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்தாா். திருவாடானை அருகே உப்பூா் த... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே காட்டுப் பகுதியிலிருந்து ஆண் சடலம் மீட்பு

தனுஷ்கோடி அருகே காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த ஆண் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் சாலையில் காம்பி... மேலும் பார்க்க