ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை
ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரத்தில் ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரண்மனை, வடக்குத் தெரு, நீலகண்டி ஊருணி, முதுநாள்சாலை, சூரன்கோட்டை, இடையாா்வலசை, சிவன்கோயில், சாலை தெரு, சா்ச், சந்தை, யானைக்கல் வீதி, கே.கே.நகா், பெரியகருப்பன் நகா், கோட்டை மேடு, சிங்காரத்தோப்பு, தினமலா்நகா், பெரியாா்நகா், லாந்தை, அச்சுந்தன்வயல், நொச்சி ஊருணி, பயோனீயா், பெரியகருப்பன்நகா், கோட்டை மேடு, எட்டிவயல், யுசு குடியிருப்பு, பட்டினம்காத்தான், ஸ்ரீராம்நகா், கழுகுரணி, சாத்தான்குளம், வாணி, ஆா்.எஸ். மடை காலவா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியம், ரெகுநாதபுரம், தெற்குகாட்டூா், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகா், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை,நயினாமரைக்கான், சேதுநகா், பிச்சாவலசை, வள்ளிமாடன், வலசை உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.