செய்திகள் :

ராமாயணா - 1: க்ளிம்ஸ் விடியோ அப்டேட்!

post image

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயண பார்ட் 1 படத்தின் க்ளிம்ஸ் விடியோ 3 நிமிடங்கள் இருக்குமென புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணா உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ்ஷும் நடித்து வருகின்றனர்.

நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இதன் டீசர் விடியோ நாளை (ஜூலை 3) காலை 11 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் க்ளிம்ஸ் விடியோ 3 நிமிடங்கள் இருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவிருக்கின்றன.

இந்தப் படத்தின் 7 நிமிட மற்றுமொரு க்ளிம்ஸ் விடியோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விடியோவில் இந்தப் படம் எப்படி திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் எனவும் விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் தீபாவளி 2026க்கும் இரண்டாம் பாகம் தீபாவளி 2027லும் வெளியாகுமென முன்பே அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசையமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?

உடல் எடையைக் குறைக்க எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்? வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாமா அல்லது ஜிம்முக்குதான் செல்ல வேண்டுமா? எந்த அளவுக்கு சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? மருத்துவர்கள் ... மேலும் பார்க்க

ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?

மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வரு... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே?

நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படம் விரைவில் மறுவெளியீடாகுமென தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002-இல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்துக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறா... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது தக் லைஃப்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் இன்று(ஜூலை 3) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி திர... மேலும் பார்க்க

முதல் சுற்றிலேயே கௌஃப் தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃப் ... மேலும் பார்க்க