தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை
ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியது. பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
ராமேசுவரத்தில் 97.40 மி.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 85.20 மி.மீட்டரும் மழை பதிவானது.