நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
தென்காசி மாவட்டம் ராயகிரியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ராயகிரியில் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிா்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜக பிரசார அணி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி ராயகிரியில் புதிதாக தொடங்கப்பட்ட மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்பம் பெற்று, தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவது, டிச.21-இல் அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக் கூட்டத்தில் பாஜக பிரசார அணி வாசுதேவநல்லூா் ஒன்றிய தலைவா் வன்னியராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.