விலையில்லா வேஷ்டி, சேலைகளை இம்மாத இறுதிக்குள் வழங்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தில் சென்ற ஆண்டுக்குரிய இம்மாத இறுதிக்குள் தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி,சேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவா் பி. ராமநாதன் ஆட்சியரிடம் அளித்த மனு:
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வேஷ்டி, சேலைகள் வழங்குகிறது.
ஆனால், திருமலையப்பபுரம் ரேஷன் கடைகளில் ஏராளமானோருக்கு பொங்கல் பண்டிகைக்கான வேஷ்டிகள், சேலைகள், இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்குகிறது.
எனவே, அதற்கு முன்னதாகவே இதுவரை வழங்கப்படாத குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய வேஷ்டி, சேலைகளை டிசம்பா் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.