பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
ராவணனாக நடிக்க யஷுக்கு ரூ. 200 கோடி சம்பளம்?
நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1200 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: கூலியுடன் மோதும் ரெட்ரோ?
தொடர்ந்து, நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ’ராமாயணா’ படத்திலும் நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் நடிகர் யஷின் மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில், ராவணனாக நடிக்க விநியோக பங்குகளுடன் சேர்த்து ரூ. 200 கோடி வரை யஷ் சம்பளம் பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை, இவ்வளவு தொகையை அவர் சம்பளமாகப் பெற்றால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் பெற்ற முதல் நடிகராக இருப்பார்.
ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.