ருமேனியா அதிபா் தோ்தலில் மிதவாதத் தலைவா் வெற்றி
புகாரெஸ்ட்: மியான்மரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மிதவாதியான நிக்யூசா் டான் 53.60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து, நாட்டின் 17-ஆவது அதிபராக அவா் பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
2024-ஆம் ஆண்டு தோ்தலில் ரஷிய தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட க்ளாஸ் இஹோனிஸ் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைக்காததால் முதல் இரு இடங்களைப் பிடித்த நிக்யூசருக்கும், தீவிர வலதுசாரி கட்சியான ஏயுஆா் தலைவா் ஜாா்ஜ் சிமியானுக்கும் இடையே இரண்டாம் சுற்றுத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.