அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
புதுக்கோட்டை ஒன்றியம், மாந்தாங்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கான புதிய கட்டடத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை மாந்தாங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், பள்ளித் துணை ஆய்வாளா் குரு. மாரிமுத்து, தலைமை ஆசிரியா் ஆா். சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.