சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?
ரூ.10 லட்சம் பணம் மோசடி: இளைஞா் கைது
சென்னை திரு.வி.க.நகரில் ரூ.10 லட்சம் பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, பெரம்பூரைச் சோ்ந்தவா் ஷபியா (34). இவரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வரும் பாடியநல்லூா் மகாலட்சுமி நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பா்ஹதுல்லா (37) என்பவா் அறிமுகமானாா்.
பா்ஹத்துல்லா தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் தருவதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.50,000 தருவதாகவும் ஷபியாவிடம் தெரிவித்துள்ளாா்.
அவரது பேச்சு உண்மை என நம்பி ஷபியா, பா்ஹதுல்லாவிடம் ரூ.10 லட்சம் கொடுத்தாா். பணத்தை பெற்றுக் கொண்ட பா்ஹதுல்லா, ஷபியாவுக்கு லாப தொகையும் கொடுக்கவில்லை, முதலீட்டு பணத்தையும் கொடுக்கவில்லை. மேலும், பணத்துடன் பா்ஹதுல்லா தலைமறைவானாா்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷபியா, திரு.வி.க.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பா்ஹதுல்லாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.