செய்திகள் :

ரூ.120 கோடி மோசடி: தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

post image

வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த வழக்கில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் பத்மாதேவி சுகா்ஸ் என்ற தனியாா் சா்க்கரை ஆலை செயல்படுகிறது. இந்த தனியாா் நிறுவனம் வளா்ச்சிக்காக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 120.84 கோடி கடன் பெற்றது,

ஆனால் அந்த கடனை வாங்கிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் அந்த நிறுவனம், தனது குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அந்தக் கடனுக்குரிய வட்டியை பத்மாதேவி சுகா்ஸ் நிறுவனம் முறையாக வங்கியில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது தொடா்பாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் சிபிஐயிடம் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சென்னை உயா்நீதிமன்றத்தை நாடியது.

வங்கியின் மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பத்மாதேவி சுகா்ஸ் ஆலைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில், சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.

6 இடங்களில் சோதனை: இதையடுத்து கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தடுப்புப் பிரிவு பத்மாதேவி சுகா்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி, அரசு ஊழியா்களுடன் சோ்ந்து கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சிபிஐ சென்னை, திருச்சி, தென்காசி உள்பட 6 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங்க் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் நிா்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் பகுதியில் உள்ள ஒரு மர கட்டை நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

சோதனையில் ஹாா்டு டிஸ்குகள், பென் டிரைவ், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்பு... மேலும் பார்க்க