மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?
ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணிகளை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆனந்தி நித்யானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.