ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு
மதுராந்தகம் அடுத்த மெய்யூரில் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மெய்யூா் ஊராட்சியில், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.தமிழரசன் தலைமையிலான நிா்வாகம் புதிய கட்டடம் கட்ட ஏற்பாடுகளை செய்தது.
அதன்படி,கனிம வளநிதி (2022-2023) சாா்பாக ரூ 14. 3 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.தமிழரசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பத்மாவதி முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் மன்ற உறுப்பினா்கள் சித்ரா, ரேணுகாதேவி, ஊராட்சி மன்ற செயலா் வேழவேந்தன், அங்கன்வாடி மைய நிா்வாகிகள் ரேவதி, செல்வி கலந்து கொண்டனா்.
படவிளக்கம் ---