தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டாா்.
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலா் சன்னிலாய்டு கொடுத்த தகவலின் பேரில் ஏற்கெனவே வணிகவரித் துறை அதிகாரி சுரேஷ் மற்றும் பாபு ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடம் செவ்வாய்க்கிழமை இணை ஆணையா் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், கொடுங்கையூரைச் சோ்ந்த வணிகவரித் துறை அதிகாரி ஜானகிராமன் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனா். அதனடிப்படையில், ஜானகிராமனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மேலும், ஜானகிராமனின் காா் ஓட்டுநா் அப்துல்லாவையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.