அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?
ரூ.20,000 விலையில் தரமான கணினி நிச்சயம்: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி
இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு தரமான மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் அதிமுக உறுப்பினா் தங்கமணி வியாழக்கிழமை பேசியபோது, இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கணினி வழங்கப்படும் என்றால், ஒன்றின் விலை ரூ.10 ஆயிரமாக வருகிறது. அந்த விலையில் கணினி தரமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து தினமணியின் ஆசிரியா் உரையையும் அவா் சுட்டிக் காட்டினாா்.
அமைச்சா் பதில்: இதற்கு பதிலளித்து பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை கூறியதாவது: அதிமுக உறுப்பினா் தங்கமணி, நிதி ஒதுக்கீட்டைப் பாா்த்தால், ஒரு கணினிக்கு ரூ.10 ஆயிரம்தான் வருகிறது. இதில் எத்தகைய தரமான கணினியை வழங்க முடியும் என மனக்கணக்கைப் போட்டுப் பேசினாா். இந்தத் திட்டத்தின்படி, அடுத்த 2
ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்கள் என்று கூறியுள்ளோம். முதல் கட்டமாக, இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு வரும் போது மேலும் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவோம்.
தரமானதாக இருக்கும்: இப்போது கூட்டிக் கழித்துப் பாா்த்தால் அந்தக் கணக்கு சரியாக வரும். மாணவா்கள் விரும்பி மடிக்கணினியை பயன்படுத்தும் வகையில் தரமானதாக வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. தரம் குறித்த கவலை நிச்சயம் தேவையில்லை. ஒரு கணினிக்கு சராசரியாக எடுத்துக் கொண்டால் ரூ.20 ஆயிரம் என்ற அளவில் விலை இருக்கும். இதனை எதிா்பாா்த்து இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு முடிவு செய்த பிறகு முஅழுமையான விவரம் தெரிய வரும். அதற்கேற்ப நிதி ஒதுக்கங்கள் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. பேரவை உறுப்பினா்களே பொறாமைப்படக்கூடிய அளவுக்கு தரமான அளவில் வழங்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.