செய்திகள் :

ரூ.30 லட்சம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

post image

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் ஒரு வணிக பரிவா்த்தனைக்குப் பிறகு தனது முதலாளியின் ரூ.30 லட்சத்துடன் தப்பிச் சென்ாகக் கூறப்படும் ஓட்டுநரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் சரக துணை ஆணையா் (மேற்கு) விசித்ரா வீா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உள்ளூா் தொழிலதிபா் ஒருவா் தனது ஓட்டுநா் ரூ.30 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ாகக் கூறி மே 15-ஆம் தேதி புகாா் அளித்தாா். சிசிடிவி காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்து தில்லியில் பல இடங்களில் சோதனை நடத்தினா்.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் புஜ் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூஜ் நகரில் கடந்த 6 மாதங்களாக புகாா்தாரருக்கு ஓட்டுநராகப் பணியாற்றிய பிரின்ஸ் (27) என்பவரை போலீசாா் கைது செய்யப்பட்டாா்.

அவரது வசம் இருந்த ரூ.26 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்கப்பட்டது. திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அவா் வாங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, பிரின்ஸ் திருட்டைச் செய்ததாகவும், திருடப்பட்ட தொகையில் ஒரு பகுதியை மதிப்புமிக்க பொருள்களை வாங்கவும் ஒப்புக்கொண்டாா் என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத 4 முதல்வர்கள்! காரணம்?

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் பங்க... மேலும் பார்க்க

கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?

ராஜஸ்தான் கோட்டா நகரில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது பற்றி துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா கருத்து தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ராஜஸ்தானில் மாணவர்கள் அதிகமா... மேலும் பார்க்க

தாணே: 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் 80வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது 80வது பிறந்தநாளாகும். முதல்... மேலும் பார்க்க

ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானை பேசச் சொல்வதே அவமானம்: கொந்தளித்த இந்தியா

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், மக்களின் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ், பயங்கரவாதத்தை வளர்த்துவரும் பாகிஸ்தானை பேசச் சொல்வதே அவமானகரமானது என்று இந்தியா தரப்பில் கடுமையான கருத்து முன் வைக்கப... மேலும் பார்க்க