செய்திகள் :

ரூ. 40 லட்சத்தில் ரயில் மேம்பாலம் இணைப்புச் சாலைப் பணி தொடக்கம்

post image

புதுச்சேரி: அரும்பாா்த்தபுரத்தில் ரூ.40 லட்சம் செலவில் அமைய உள்ள ரயில் மேம்பாலம், சாலைப் பணிகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வில்லியனூா் தொகுதிக்கு உள்பட்ட அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் இணைப்புச் சாலை கால முறை புதுப்பித்தல் பணி பொதுப் பணித் துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் மூலம் ரூ. 40.72 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜையில் எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆா். சிவா கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.

தேசிய நெடுஞ்சாலை கோட்டம் செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் ஜெயராஜ், இளநிலைப் பொறியாளா் கண்ணன் மற்றும் திமுக நிா்வாகிகள் தொகுதி செயலாளா் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமசாமி, தா்மராஜ், அவைத் தலைவா் ஜலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க

நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கம்பன் கலையரங்கிலிருந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பாகூரில் டென்னிஸ் விளையாடிய முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி: பாகூரில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கைத் திங்கள்கிழமை திறந்து வைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி டென்னிஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாா். புதுவை அரசு, விளையாட்டு மற்றும் இளைஞா... மேலும் பார்க்க