செய்திகள் :

ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2023-2024 ஆம் ஆண்டில் 12,387 கோடிக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக மலேசியா, அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவிலான ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C-08/2025

பணி: Senior Works Engineer

காலியிடங்கள்: 8

வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000

தகுதி: பொறியியல் துறையில் Electrical &Electronics, Electronics & Communication, Electronics & Instrumentation ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியஅஞ்சல் முகவரி:

Joint General Manager, HRM, IRCON International Limited, C-4, District Centre, Saket, New Delhi - 110 017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.5.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கர்நாடகம் மாநிலம் மைசூருவில் செயல்பட்டு வரும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டி... மேலும் பார்க்க

ஐஐஎம்-இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) புத்த கயாவில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

என்டிபிசி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் பொறியாளர் வேலை: காலியிடங்கள்: 182

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி வணிகத்தில் முன்னிலையில் உள்ள என்டிபிசி பசுமை எரிசக்தி லிமிடெட் (என்ஜிஇஎல்) நிறுவனத்தில... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் உதவியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் ல... மேலும் பார்க்க

விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமானப்படையில் இசைக் கலைஞராக பணிபுரிய அக்னி வீரர் வாயு திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சர்.சி.வி. ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பயிற்சி பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண் : 05 / 20... மேலும் பார்க்க