IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' - பட்லருக்கு ப...
ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி தற்காலிக ஊழியா் கைது
திருப்பூரில் டிடிசிபி அங்கீகாரம் பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி தற்காலிக ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). இவருக்கு சொந்தமான 5.5 சென்ட் இடம் திருப்பூா்- மங்கலம் சாலையில் உள்ள ஜான்ஜோதி காா்டனில் உள்ளது.
இந்த மனைக்கு, டிடிசிபி அங்கீகாரம் வாங்க ராயபுரத்தில் உள்ள நகா் ஊரமைப்புப் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தாா். அப்போது அங்கீகாரம் வழங்க, அங்கிருந்த தற்காலிக தொழில்நுட்ப உதவியாளா் நாகலிங்கம் (38), ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூா்த்தி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
இதையடுத்து, காவல் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராயபுரம் அலுவலகத்தில் பணியில் இருந்த நாகலிங்கத்திடம் கிருஷ்ணமூா்த்தி கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் நாகலிங்கத்தை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.