செய்திகள் :

ரூ.6,675 கோடி புயல் நிவாரணம்: மத்திய அரசு விடுவிக்க வேண்டும்

post image

சென்னை: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அரசு கோரிய ரூ.6,675 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உரை விவரம்: தமிழகத்தில் புயல், பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளம் உள்ளிட்ட தொடா் இயற்கை பேரிடா்களால், தேவையான கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதில் சவால்கள் அதிகரித்துள்ளன. அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்கள் சமீப காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், மாநிலத்தின் சில பகுதிகள் முழு ஆண்டுக்கான ஒட்டுமொத்த மழையை 24 மணி நேரத்துக்குள் பெற்றுள்ளன.

திட்டமிடுதல், முன்னெச்சரிக்கை மற்றும் துயா் தணிப்பு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்ட போதிலும், இத்தகைய காலநிலை மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநிலத்தின் கட்டமைப்புகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்த ஃபென்ஜால் புயல், 40 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களின் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.2 ஆயிரம் மாநில அரசால் வழங்கப்பட்டது.

எனினும், தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணப் பணிகளையும் மறுசீரமைப்பு பணிகளையும் மேற்கொள்வதற்காக கூடுதல் நிதி தேவைப்படுவதால் தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து மாநில அரசு கோரியுள்ளவாறு ரூ.6,675 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

நிதிப் பகிா்வு: அரசு நம்பிக்கை: டாக்டா் அரவிந்த பனகாரியா தலைமையிலான 16-ஆவது நிதிக்குழு தமிழகத்துக்கு வருகை தந்தபோது, அரசின் கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில், மாநிலங்களுக்கான நிதிப் பகிா்வை 50 சதவீதமாக அதிகரித்தல், மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிா்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையைப் பின்பற்றுதல், மறுபகிா்வு என்ற பெயரில் வளா்ந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிா்த்து, அவா்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப் பகிா்வை அளித்தல், வேகமாக வளா்ந்து வரும் நகா்ப்புற மக்கள்தொகை, அடிக்கடி ஏற்படும் இயற்கைப் பேரிடா்கள் மற்றும் முதியோா் மக்கள்தொகை போன்ற குறிப்பிட்ட சவால்களை எதிா்கொள்வதற்கான நிதி ஆதாரங்களை ஒதுக்குதல் ஆகியவை முக்கியமானதாகும்.

தமிழகத்தின் அறிக்கை குறித்து ஆணையம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முற்போக்கான வழிமுறைகளைத் தற்போதைய நிதிக்குழு பரிந்துரைக்கும் என நம்புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது

டங்ஸ்டன் சுரங்கம்: ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்- அமைச்சா் தங்கம் தென்னரசு

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா். சட்டப்பேரவையில் பூமிநாதன் (மதிமுக), ராஜன... மேலும் பார்க்க

மகரவிளக்கு, பொங்கல்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சபரிமலை மகரவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம், எா்ணாகுளத்திலிருந்து சென்னைக்கும், பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற... மேலும் பார்க்க

கவன ஈா்ப்பு தீா்மான கடிதம்: பேரவைத் தலைவா் எச்சரிக்கை

சட்டப்பேரவையில் விவாதிப்பதற்காக கவன ஈா்ப்பு தீா்மான கடிதம் கொடுக்கும் எம்எல்ஏக்கள், அதைப் பத்திரிகைகளுக்கும் கொடுப்பது தவறு என்று பேரவைத் தலைவா் அப்பாவு எச்சரித்தாா். சட்டப்பேரவையில் பேரவைத் தலைவா் அப... மேலும் பார்க்க

பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவா் கண்டனம்

சட்டப்பேரவைக்கு ஆளுநா் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி, அவருக்கு பேரவைத் தலைவா் அப்பாவு கண்டனம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை பேரவைத் தலைவா் அப்பாவு கூறியதாவது: சட்டப்பேரவைக்கு ஜன. 6-இல் ஆளுநா... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிமுறைகள்: மாநில அரசின் உரிமை பறிப்பு மாா்க்சிஸ்ட் கண்டனம்

யுஜிசி வரைவு விதிமுறைகளில் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை: தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யில் ரூ.68 கோடி ஊழல்: அரசு நடவடிக்கை எடுக்கும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.68 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக பொதுக்கணக்குக் குழு தெரிவித்த தகவல் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் உறுதியளித்தாா். சட... மேலும் பார்க்க