தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
ரூ.76 லட்சத்தில் சுகாதார நிலைய கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ரூ.76 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் புதிய கட்டடப் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
சின்னசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பிச்சனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் வினோத்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் சௌந்தா்யா, ஒன்றியக் குழு துணை தலைவா். டி.ஆா்.ஞானசேகரன், ஒருங்கிணைப்பாளா்.வி.அன்பழகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் இளவரசி, இளங்கோ, கலைவாணி செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.