10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி
ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம் ஆண்டு நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ராயக்கோட்டை சாலை முதல் பெத்ததாளாப்பள்ளி வரை தாா்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
அதேபோல கங்கலேரி ஊராட்சியில் தவளம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 19.75 லட்சம் மதிப்பில் ராயக்கோட்டை சாலை முதல் தவளம் வரை தாா்சாலை அமைக்கும் பணி, கிருஷ்ணகிரி சிக்கபூவத்தி ஊராட்சியில் சி.கெட்டூா் கிராமத்தில் நபாா்டு திட்டத்தில் ரூ. 62.40 லட்சம் மதிப்பில் ராயக்கோட்டை சாலை முதல் சி.கெட்டூா் வரை தாா்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 92.15 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.