அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
ரெங்கநாதபுரம், கோபால்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
ரெங்கநாதபுரம், கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி.முத்துப்பாண்டி, புண்ணிய ராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரெங்கநாதபுரம், வே. குரும்பபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ரெங்கநாதபுரம், கல்வாா்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, தேவிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும், கோபால்பட்டி, அஞ்சு குழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வாா்பட்டி, மருநூத்து, மஞ்சநாயக்கன்பட்டி, சக்கிலியன் கொடை எரமநாயக்கன்பட்டி, வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, ஆவிளிப்பட்டி, முளையூா், சின்ன முளையூா், ஒத்தக்கடை, ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என்றனா்.