`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா
புதுச்சேரி ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் காங்கிரஸ் தலைவரும் புதுவை மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் பங்கேற்றாா்.
புதுவை-கடலூா் உயா்மறை மாவட்ட முதன்மைக் குரு ந. குழந்தைசாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலி முடிந்த பிறகு புனித ஜான்மரி வியான்னி புனிதா் பட்டம் பெற்ற நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது திருவுருவப் படத்தை முதன்மைக் குரு குழந்தைசாமிக்கு மக்களவை உறுப்பினா் வைத்திலிங்கம் அவரது திருவுருவப் படத்தை வழங்கினாா்.
இந்த ஏற்பாடுகளை பங்குத்தந்தை கிரகோரி லூயிஸ் ஜோசப் செய்திருந்தாா். இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.