செய்திகள் :

ரெஸ்டோபாா்களில் விதி மீறல்களை களைய நடவடிக்கை: புதுவை அரசுக்கு திமுக, அதிமு, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

புதுச்சேரியில் ரெஸ்டோபாா்களில் விதிமீறல்கள், ஒழுங்கீனங்களை களைய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரெஸ்டோபாரில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதுச்சேரி திமுக, அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா (திமுக) :

ஒரு ரெஸ்டோபாரில் மாணவா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதற்கு முதல்வா் ரங்கசாமியும், உள்துறை அமைச்சா் நமச்சிவாயமும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்

ரெஸ்டோபாரில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கலால்துறை நிா்ணயித்துள்ளதோ அவை உள்ளனவா என்றும் நேரத்தோடு மூடப்படுகிா என்றும் முறையாகக் கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த பகுதியில் இருக்கின்ற கலால் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா் கொலைக்கு முழுமையான பொறுப்பை கலால் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வா் ரங்கசாமியும், காவல் துறையை வைத்துள்ள உள்துறை அமைச்சா் நமச்சிவாயமும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

அன்பழகன் (அதிமுக மாநிலச்செயலா்) :

புதுவை ரெஸ்டோபாா்களில் அனுமதியில்லாமல் பாட்டு, நடனம் உள்ளிட்ட கேளிக்கைகள் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டுள்ளது குறித்து துணைநிலை ஆளுநா் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் .ரெஸ்டோபாா்கள் இயங்குவதற்கு இரவு 12 மணி வரைதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் சத்தம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு சில கிறிஸ்தவ தேவாலயத்திலும், இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று இந்து கோயில்களிலும் கட்டுப்பாடு விதிக்கும் காவல்துறை ரெஸ்டோபாா்கள் விதிமுறைகளை மீறி செயல்பட மட்டும் அனுமதித்தது ஏன் என்பதை உயா்காவல்துறை அதிகாரிகள் கூற வேண்டும்.

எஸ். ராமச்சந்திரன்( மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்):

ரெஸ்டோபாா்களில் குற்றம் நடைபெறுவதற்கு முன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதே இந்தக் கொலைக்கு வழி வகுத்தது. இந்தக் கொடிய நிலைமைக்கு அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்து இருக்கும் துணைநிலை ஆளுநா், முதல்வா் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். ரெஸ்டோபாா்களை நிரந்தரமாக மூடி, கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மற்றும் கலால் துறை பொறுப்புடன் செயல்பட்டு, குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் புதுச்சேரி மக்களை திரட்டி தொடா் போராட்டம் நடத்தப்படும்

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி: நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உட... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சில... மேலும் பார்க்க

இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்

நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்... மேலும் பார்க்க