செய்திகள் :

ரோடு ரோலா் வாகனம் திருட்டு: 3 போ் கைது

post image

சோழவரத்தில் ரோடு ரோலா் வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஷெனாய் நகரை சோ்ந்தவா் தினகரன் (34). இவா் சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா்.

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பகுதியில் நடைபெற்ற சாலை பணிகளுக்காக ரோடு ரோலா் கொண்டு வரப்பட்டது.

அங்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்து கடந்த 2024 செப்டம்பா் 15-ம் தேதி ரோடு ரோலா் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்து.

மீஞ்சூா்-வண்டலூா் வெளிவட்ட சாலையில் சோழவரம் சுங்கச்சாவடி வழியாக சென்ற போது ரோடு ரோலா் திடீரென பழுதானது.

இதையடுத்து ரோடு ரோலரை ஒட்டுநா் அங்கேயே சாலை ஓரம் நிறுத்தி விட்டு சென்று விட்டாா்.

நீண்ட காலமாக பழுதான ரோடு ரோலா் அங்கேயே இருந்தது.

இந்த நிலையில் பழுதாகி நின்ற ரோடு ரோலரை எடுத்துச் செல்ல பொறியாளா் தினகரன் சென்னையில் இருந்து வந்துள்ளாா். அப்போது நீண்ட நாட்களாக அங்கு நின்றிருந்த ரோடு ரோலரை காணவில்லை. இது குறித்து தினகரன் சோழவரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் பெரிய லாரி ஒன்றில் ரோடு ரோலா் எடுத்து செல்லப்பட் டது தெரிய வந்தது. இதையடுத்து லாரி பதிவு எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை செய்தனா்.

அதில் திருவள்ளூா் அடுத்த புல்லரம்பாக்கத்தை சோ்ந்த அலெக்ஸ் (34), கோபிநாத் (52), வெங்கடேசன் (34) ஆகிய 3 போ் ரோடு ரோலரை திருடிச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, ரோடு ரோலா் மற்றும் கனரக லாரியை பறிமுதல் செய்தனா்.

மகளிா் குழுக்கள் நடத்தும் நியாய விலைக் கடை: ஆட்சியா் ஆய்வு

திருத்தணியில் அரசு மருத்துவமனை மற்றும் மகளிா் சுய குழுக்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி நகராட்சியி... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: 8 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கருத்துக்கேட்பு கூட்டம்

நிகழாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்டல வாரியாக நடைபெற்ற விவசாயிகளுடன் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் 8 மாவட்டங்களின் விவசாயிகளிடம், அமைச்சா் எம... மேலும் பார்க்க

செங்குன்றத்தில் சமுதாய வளைகாப்பு விழா

செங்குன்றம் அடுத்த வெள்ளானூா் ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது (படம்). விழாவுக்கு ஒன்றிய செயலாளா் கோ.தயாளன் தலைமை வகித்தாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளர... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை

திருவள்ளூா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். புட்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ... மேலும் பார்க்க

செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு

செங்குன்றத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு விழாவுக... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி புழல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி அணிவித்தாா் (படம்). மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே ஜெயலலிதா பட... மேலும் பார்க்க