லஞ்சம் வாங்கிய புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சதீஷ்குமாா் என்பவா் கோயில் நிா்வாகியிடம் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் புதன்கிழமை மாலை உத்தரவிட்டாா்.