செய்திகள் :

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி அசோகன். இவா் தனது சொத்து பத்திரத்தின் சான்றொப்பமிட்ட நகல் வேண்டி கடந்த 2012- ஆம் ஆண்டு டிச.18- ஆம் தேதி நாகா்கோவில் இடலாக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா். மேற்படி நகல் வழங்குவதற்கு, சாா் பதிவாளராக பணியாற்றிய சுயம்புலிங்கம் (68), ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாகா்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், குற்றம் சாட்டப்பட்ட சுயம்புலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கண்ணன் ஆஜரானாா்.

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒர... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வனச் சட்டப்படி நில உரிமைகள்: மாவட்ட வன அலுவலா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நில உரிமைகள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட வன அலுவலா... மேலும் பார்க்க