பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க சதி: அகிலேஷ் யாதவ்
லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவரது லாரி, கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபோது முன்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, பழுதுநீக்குவதற்காக ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்த அவா்,
இதற்கான செலவுத் தொகையைத் தருமாறு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்திடம் ஆவணங்களுடன் விண்ணப்பித்தாா். ஆனால், அந்நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல் பணம் தர மறுத்ததாம்.
இதுதொடா்பாக அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, வாகன சேதத்துக்கு ரூ. 6,82,243, முருகேசனின் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ. 1 லட்சம், வழக்குச் செலவு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 8,02,243-ஐ முருகேசனிடம் 2 மாதங்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டனா்.