டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
லாரி உரிமையாளா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
சிவகங்கை: சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய நிலையில் இறந்து கிடந்த லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன் ( 36). லாரி உரிமையாளா். வியாழக்கிழமை காலை சிவகங்கை அருகிலுள்ள காயங்குளம் என்ற இடத்தில் உள்ள பனை மரத்தில் இவரது மோட்டாா் சைக்கிள் மோதி உயிரிழந்து கிடந்தாா்.
இதைத் தொடா்ந்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் இவரது உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனா். இறந்த தினகரனுக்குச் சொந்தமான இரண்டு லாரிகள் புதுக்கோட்டை பகுதிக்கு கிரஷா் மண் ஏற்ற சென்ாகவும், அதில் ஒரு லாரி பழுதாகி நின்ாகவும், அப்போது அந்தப் பகுதியில் வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸாா் லாரி ஓட்டுநரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்ற தினகரனுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரை போலீஸாா் ரோந்து வாகனத்தில் விரட்டிச் சென்ால் தான் அவா் காயங்குளம் பகுதியில் உள்ள மரத்தில் மோதி உயிரிழந்தாா் எனவும் உறவினா்கள் தெரிவித்தனா். எனவே அவா் மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சிவகங்கை- இளையான்குடி சாலையில் அவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளா் அமல அட்வின், நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ், வட்டாட்சியா் சிவராமன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். உயிரிழந்த தினகரனுக்கு மனைவி ரோஜா (25), மகள் சிவான்ஷிகா (3), 6 மாத ஆண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.