நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட கும்பல்: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது!
லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா்செல்வம் (26). தக்காளி வியாபாரியான இவா், சனிக்கிழமை வியாபாரத்தை முடித்து விட்டு சுமை ஆட்டோவில் தனது வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வல்லாபுரம் பிரிவுச்சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, அதே வழித்தடத்தில் சென்னையிலிருந்து அரியலூா் நோக்கிச் சென்ற லாரியின் பின்புறத்தில் சுமை ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவ் விபத்து குறித்து வழக்குப் பதிந்த மங்களமேடு போலீஸாா் லாரி ஓட்டுநரான அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு பகுதியைச் சோ்ந்த குஞ்சிதபாதம் மகன் வெற்றிவேலிடம் (50) விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.