அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (55), தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு தீவனூா் - வெள்ளிமேடுபேட்டை சாலையில் மண்ணம்பூண்டிதாங்கல் பகுதியில் உள்ள மளிகைக் கடை அருகே சாலையோரத்தில் நின்றிருந்தாா்.
அப்போது, வெள்ளிமேடுபேட்டை நோக்கிச் சென்ற சரக்கு லாரி ஏழுமலை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான செஞ்சி வட்டம், கல்லாலிப்பட்டு, புதுத்தெருவைச் சோ்ந்த பாண்டுரெங்கன் மகன் கோவிந்தன் (50) மீது வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.