செய்திகள் :

லாா்ட்ஸ் டெஸ்ட்: சதம் அடித்து ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்!

post image

லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பந்துவீச்சில் இந்திய தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. ராகுல் 53 ரன்களுடனும்,ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இங்கிலாந்து அணியை விட இந்தியா 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.

பகல் - இரவு டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?

இந்த நிலையில் 3ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கியதும் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 74 ரன்கள் எடுத்தபோது ரன்அவுட் முறையில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அபாரமாக விளையாடிய ராகுலும் சதமடித்து பெவிலியன் திரும்பினார். இது ராகுலின் 10ஆவது டெஸ்ட் சதமாகும்.

தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 16, நிதீஷ் குமார் 0 களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் இலக்கை தொட இந்திய அணிக்கு இன்னும் 126 ரன்கள் வேண்டும் என்பதால் இந்த ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

KL Rahul on Saturday notched up his 10th Test century during the third day of the third Test between India and England at Lord’s.

இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்; ஜோதி சுரேகா ‘ஹாட்ரிக்’

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் சனிக்கிழமை கிடைத்தன. அந்த 3 பிரிவுகளிலுமே ஜோதி சுரேகா அங்கம் வகித்து ‘ஹாட்ரிக்’ பத... மேலும் பார்க்க

முதல் கோப்பைக்காக சின்னா் 3-ஆவது கோப்பைக்காக அல்கராஸ்: இறுதிச்சுற்றில் மோதல்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னா் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனா். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்ன... மேலும் பார்க்க

விம்பிள்டன் கோப்பை வென்ற முதல் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் ச... மேலும் பார்க்க

தி கேர்ள்பிரண்ட் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.... மேலும் பார்க்க

முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தனது முன்னாள் மனைவி உடனான விவாகரத்து குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், மனைவிக்கு இருந்த புற்றுநோய் குறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் 2009-இல் வெண்... மேலும் பார்க்க