செய்திகள் :

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

post image

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்திருந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பரிலிருந்து முதல்முறையாக இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இன்று (மார்ச் 28) புதியதொரு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் பயங்கர சத்ததுடன் வெடித்த குண்டுகளினால் பெய்ரூட்டின் சில பகுதிகள் புகைமூட்டமாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலானது பெய்ரூட்டின் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அருகில் குறைந்தது இரண்டு பள்ளிக்கூடங்கள் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும், தஹியே பகுதியிலுள்ள ஹிஸ்புல்லாவின் டிரோன் கிடங்குளைத் தாக்கி தகர்த்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா அங்குள்ள மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

மேலும், வடக்கு இஸ்ரேலின் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கை எனக் கூறி இஸ்ரேல் பெய்ரூட்டின் புறநகர் பகுதியிலுள்ள மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டிருந்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆனால், இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் தாங்கள் எந்தவொரு தாக்குதலும் நடத்தவில்லை எனவும் லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் சாக்குப்போக்கைத் தேடுவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை குற்றம் சாட்டியது.

இந்தத் தாக்குதல்களினால் லெபனான் அரசு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் வசித்தவர்கள் தங்களது வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்தோ அங்கிருந்து தப்பி செல்வது இதுகுறித்து வெளியான விடியோக்களில் பதிவாகியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லையிலிருந்து வெளியேற வேண்டிய காலக்கெடுவானது ஜனவரியிலிருந்து கடந்த பிப்.15 வரை நீடிக்கப்பட்டது.

ஆனால், இஸ்ரேல் ராணுவம் லெபனானின் 5 இடங்களில் வெளியேறாமல் முகாமிட்டிருந்தது. இத்துடன், கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது!

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்...!

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.ம... மேலும் பார்க்க

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்ந... மேலும் பார்க்க