அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செ...
லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்தது?
நடைப்பயிற்சியின் போது...
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் பேசினோம். "முதல்வர் ஸ்டாலின் தினசரி நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அவரது வெளியூர் பயணங்களில் கூட காலை அல்லது மாலை நடைப்பயிற்சி என்பது கண்டிப்பான ஒன்றாக இருக்கும். அதுபோல, இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நடைப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட, ஒருமாதிரி இருக்கு என்று சொல்லியிருக்கிறார். முதல்வர் வழக்கத்துக்கு மாறாக படபடவென இருக்க நடைப்பயிற்சியைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

அவர் வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே முதல்வரின் மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் முதல்வருக்குக் கொளத்தூரில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் இருந்தன. அதற்கும் மாலை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவும் இருந்தன.
கூடவே அதிமுகவிலிருந்து விலகிய அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்வும் இன்று திட்டமிடப்பட்டிருந்தது. காரணம், நாளை முதல்வர் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திருப்பூர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் காலையே முதல்வருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது.
முதல்வரின் இல்லத்துக்கு வந்த மருத்துவர்கள் முதல்வரைப் பரிசோதனை செய்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில பரிசோதனைகள் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். முதலில் பரிசோதனைகளை முடித்துவிட்டு பின்னர் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், மாற்றுக் கட்சியிலிருந்து ஒரு முக்கிய தலைவர் திமுக-வில் இணைய இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை முதலில் முடித்துவிட்டு பின்னர் மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அன்வர் ராஜா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பின்னர், அறிவாலயத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேராக கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதற்கட்டமாகப் பரிசோதனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இன்று முதல்வர் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. கூடவே அவருக்கும் இன்னும் சில ஸ்கேன்களும், பரிசோதனைகளும் செய்யவேண்டிய தேவையும் இருந்தது.
மேலும் மருத்துவர்கள் முதல்வரை அடுத்த இரண்டு தினங்களுக்குக் ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதனால், அடுத்த இரண்டு தினங்களுக்கு முதல்வரின் அனைத்து பயணங்களும், நிகழ்ச்சிகளும் தேதி அறிவிக்காமல் ரத்து செய்யப்பட்டன.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை மருமகன் சபரீசன், மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தான் முதல்வர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா அல்லது அடுத்த சில தினங்களுக்கு மருத்துவமனையில் தொடர்வாரா என்பது தெரியவரும்" என்றார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.