வங்காரம்பேட்டையில் அமுது படையல் விழா
பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டை செங்குந்தா் தெருவில் உள்ள இடுக்கண் தீா்த்த விநாயகா், வங்காரம்மன் கோயில் வளாகத்தில் அமுது படையல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி இடுக்கண் தீா்த்த விநாயகா், வங்காரம்மன் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பூரண கும்பம் வைத்து ருத்ராபதியாருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து அமுது படையல் விழா நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து, சுவாமிக்கு படையலிட்ட உணவுகளை பிரசாதமாக பெற்றுச் சென்றனா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், தெருவாசிகள் செய்திருந்தனா்.