கும்பகோணம் மாநகராட்சி புதிய ஆணையராக மு. காந்திராஜ் பொறுப்பேற்பு
கும்பகோணம் மாநகராட்சியின் புதிய ஆணையராக மு. காந்திராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
கும்பகோணம் மாநகராட்சி ஆணையராக இருந்த லட்சுமணன் அண்மையில் சென்னை தலைமை செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி இணை ஆணையா் கே. பாலு பொறுப்பு ஆணையராக இருந்து வந்தாா்.
இந்நிலையில், கும்பகோணம் மாநகராட்சியின் புதிய ஆணையராக மு. காந்திராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராக பணியாற்றினாா்.